மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

சர்ச்சை பெயரில் ஐஸ்வர்யா ராஜேஷ்

சர்ச்சை பெயரில் ஐஸ்வர்யா ராஜேஷ்

`கரு' படத்தைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் `லட்சுமி’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் லட்சுமி கேரக்டரில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கௌதம் மேனன் வெளியிட்ட `லட்சுமி’ குறும்படம் பல்வேறு விவாதங்களுக்கு உட்பட்டது. சர்ஜுன் இயக்கிய இப்படத்தில் லட்சுமி கேரக்டரில் நடித்த லட்சுமி பிரியாவின் கேரக்டர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்து வரும் ஐஸ்வர்யா, லட்சுமி கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ட்ரெண்ட் ஆர்ட்ஸ் ரவி தயாரித்து வரும் இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் முடிந்தது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கத் திட்டமிட்டு வருகிறார்கள். கருணாகரன் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக்கி வருகிறார்கள். முழுக்க நடனம் தொடர்பான படம் என்பதால் 12 பாடல்கள் படத்தில் இடம்பெறுகிறது என்று கூறி வருகின்றனர். சாம்.சி.எஸ் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, எடிட்டராக ஆண்டனி பணிபுரிந்து வருகிறார்கள்.

தேவி, கரு என சமீபப் படைப்புகளை பெண்ணுக்கு முக்கியத்துவம் தரும் படமாக உருவாக்கி வருகிறார் விஜய். அந்த வகையில் இந்தப் படத்தின் தலைப்பே பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்குமாறு இருப்பதால் லட்சுமி பெயரில் நடிக்கும் ஐஸ்வர்யாவின் கேரக்டர் சர்ச்சைகளை ஏற்படுத்துமா என்பது விரைவில் தெரிந்து விடும்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon