மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

சோலார் திட்டம்: உலக வங்கி நிதியுதவி!

சோலார் திட்டம்: உலக வங்கி நிதியுதவி!

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தியாவின் மின்னுற்பத்தித் திட்டங்களுக்கு உலக வங்கி ரூ.636.31 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சோலார் மின் உற்பத்திப் பூங்காக்கள் அமைக்க இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம் (IREDA) உலக வங்கி வழங்கும் நிதியைச் செலவிடுகிறது. அதற்கான நிதியுதவியை வழங்க உலக வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த மாபெரும் மின்னுற்பத்தித் திட்டத்தின் முதற்கட்டப் பணியாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரேவா மற்றும் மந்த்சவுர் மாவட்டங்களில் முறையே 750 மெகா வாட் மற்றும் 250 மெகா வாட் அளவிலான மின்னுற்பத்தித் திறன் கொண்ட பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.

உலக வங்கி வழங்கவுள்ள ரூ.636.31 கோடி நிதியின் வாயிலாக மின்னுற்பத்தித் திட்டங்களுக்கான உள்கட்டுமானப் பணிகள், வடிகால் வசதி, தண்ணீர் விநியோகம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டங்களின் வாயிலாக மத்திய அரசின் இலக்காக உள்ள 100 கிகா வாட் மின்சாரத்தை 2022ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்யவியலும் என்று பொருளாதார விவகாரங்கள் துறை மற்றும் மத்திய நிதித் துறை இணைச் செயலாளரான சமீர் குமார் காரே கூறுகிறார். இந்தியாவின் மின்னுற்பத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவது வெறும் முதலீட்டுடன் நின்றுவிடாமல் அது சர்வதேசச் சோலார் சந்தையை விரிவுபடுத்தவும் உதவிகரமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon