மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

டாப் கியரில் `நரகாசூரன்’!

டாப் கியரில் `நரகாசூரன்’!

`துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன், தற்போது இயக்கி வரும் நரகாசூரன் படத்தின் டீசர் தேதியின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கிறார். நரகாசூரன் படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி 45 நாட்களை விட குறைவாக 41 நாட்களில் முடித்து கௌதம் மேனனை ஆச்சரியப்படுத்தி, பாராட்டுப் பெற்றார் கார்த்திக் நரேன். அதே வேகத்தில் டீசர் வெளியீட்டுத் தேதியையும் குறித்து விட்டார்.

நரகாசூரனின் டீசரை நவம்பர் 25 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார். அரவிந்த் சாமி, சந்தீப் கிஷான், இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இதற்கு ரான் யோஹான் இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் டீசர் அறிவிப்பைத் தொடர்ந்து ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதியையும் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon