மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

முதல் பெண் மருத்துவரின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!

முதல் பெண்  மருத்துவரின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ருக்மாபாய் ராவத்தின் 153-வது பிறந்தநாளை இணையதள தேடுதளமான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் இன்று(நவம்பர் 22) கொண்டாடி வருகிறது.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்குரியர் ருக்மாபாய் ராவத். இவர் 1864ஆம் ஆண்டு 22ஆம் தேதி மும்பையில் பிறந்தார். அவரது பெற்றோர்களுக்கு ஒரே பெண் குழந்தை. தனது 9 வயதில் தந்தையை இழந்த ருக்மாபாய், 11 வயதில் தாதாஜி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் அவர் தனது கணவருடன் வாழாமல் வளர்ப்புத் தந்தையின் அரவணைப்பில் இருந்தபடி கல்வி பயின்று வந்தார். 1885ஆம் ஆண்டு விவாகரத்து வேண்டி நீதிமன்றம் சென்றார். இதற்கு இந்தியாவில் வாழும் இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து 1887ஆம் ஆண்டு அவருக்கு நீதிமன்றம் இரண்டு வாய்ப்புகள் கொடுத்தது. கணவருடன் வாழவேண்டும், இல்லையேல் 6 மாதகாலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். ருக்மாபாய் கல்வியின் மீது உள்ள ஆர்வத்தால் சிறை சென்றார். இதுகுறித்து இங்கிலாந்து ராணி விக்டோரியாவுக்கு உதவி வேண்டி கடிதம் எழுதினார். இதையடுத்து அவரது சிறை தண்டனையை இங்கிலாந்து ராணி ரத்து செய்தார். பிறகு

பின்பு 1888 ஆம் ஆண்டு கணவரை சட்டப்படி பிரிந்த ருக்மாபாய், அதே ஆண்டு இங்கிலாந்து சென்று மகளிர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை தொடர்ந்தார். மருத்துவ பட்டம் பெற்று 1894ஆம் ஆண்டு இந்தியா வந்த ருக்மாபாய் சூரஜ், ராஜ்கோட், பாம்பே ஆகிய இடங்களில் 36 ஆண்டுகள் மருத்துவ சேவையாற்றினார். அவர் பிகாஜி என்னும் மருத்துவரை மறுமணம் செய்து கொண்டார். மேலும் இந்திய சுதந்திரத்திற்காகவும், பெண்கள் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இவ்வளவு சாதனைகள் படைத்த அவர் 1955ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி 91 வயதில் இயற்கை எய்தினார்.

அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இணையதள தேடுதளமான கூகுள் சிறப்பு டூடுளின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon