மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

தெலுங்கில் கைகொடுக்குமா கணிதன்?

தெலுங்கில் கைகொடுக்குமா கணிதன்?

அதர்வா நடிப்பில் உருவான கணிதன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காக அதில் நிகில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

சந்தோஷ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கணிதன் திரைப்படத்தில் பத்திரிகையாளராக அதர்வா நடிக்க அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்திருந்தார். ஆக்‌ஷன் திரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் நல்ல கதையம்சத்துடன் உருவாகியிருந்தாலும் தமிழில் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு கன்னடத்தில் `அதிரதா’ என்ற பெயரில் ரீமேக்காகி கவனம் பெற்றது. கன்னடத்தில் மகேஷ் பாபு இயக்கியிருந்தார்.

தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் நடைபெற்று வருகின்றன. கதாநாயகனாக முதலில் ரவிதேஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது நிகில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழில் இயக்கிய சந்தோஷ் தெலுங்கிலும் இயக்குகிறார். படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது.

நிகிலுக்கு ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இயக்குநர் சந்தோஷ் படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “ரவி தேஜா உள்ளிட்ட பிற நடிகர்களிடம் பேசினேன். இறுதியில் நிகில் நாயகனாக நடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு பதிப்புக்காக கதையில் சில மாற்றங்களை செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon