மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பி.எஸ்.என்.எல்.!

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பி.எஸ்.என்.எல்.!

மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தன்னிடமுள்ள வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து பல சிறந்த ஆஃபர்களை வாரி வழங்கி வரும் நிலையில், தற்போது புதிதாக இணையும் வாடிக்கையாளர்களுக்கும் அதிரடியான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பில் லேண்ட்லைன், ப்ராட்பேண்ட், FFTH கனெக்சன் உள்ளிட்ட சேவைகளில் புதிதாக இணையும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு இலவச சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இதில் எப்படி இணைவது?

* ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்கை லாக்ஆன் செய்து அதில் பி.எஸ்.என்.எல். பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

* அதில் `Book Now' என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

* இதன் மூலம் லேண்ட்லைன், ப்ராட்பேண்ட், FFTH கனெக்சன் உள்ளிட்ட சேவைகளில் புதிதாக இணையும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த மூன்று விதமான சேவைகளும் முதல் மாதத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் நீடித்து வரும் கடுமையான போட்டி காரணமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் இதுபோன்ற சலுகைகளைத் தொடர்ந்து அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon