மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

காலிறுதியில் 5 இந்திய வீராங்கனைகள்!

காலிறுதியில் 5 இந்திய வீராங்கனைகள்!

மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டைப் போட்டியின் காலிறுதிக்கு 5 இந்திய வீராங்கனைகள் முன்னேறியுள்ளனர்.

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்றுவரும் மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டைப் போட்டியில் நேற்று (நவம்பர் 21) நடைபெற்ற போட்டியில் 64 எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்குஷிதா போரோ துருக்கி நாட்டினை சேர்ந்த அலுக் காக்லோவை வீழ்த்தினார். இதற்கு முன்னர் அன்குஷிதா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கி வீராங்கனையை வீழ்த்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போரோ “இதற்கு முன்னரே காக்லோ உடன் மோதி உள்ளேன். அவர்கள் நாட்டில் மோதிய போது என்னை அவர் வீழ்த்தினார். அதற்கு பதிலடி தரும் வகையில் நான் அவரை நமது நாட்டில் வீழ்த்தியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இவர் மட்டுமின்றி 54 கிலோ எடைப் பிரிவில் ஷாஷி சோப்ரா, 54 கிலோ எடைப் பிரிவில் சாக்‌ஷி சவுத்ரி, 51 கிலோ எடைப் பிரிவில் ஜோதி குலியா மற்றும் 48 கிலோ எடைப் பிரிவில் நீத்து ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். அதேபோல் 81 கிலோ எடைப் பிரிவில் அனுபமாவும், 81 கிலோவிற்கும் அதிகமான எடைக்கொண்ட வீராங்கனைகளுக்கான பிரிவில் நேஹா யாதவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். எனவே இந்தியாவுக்குப் பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (நவம்பர் 22) நடைபெறவிருக்கும் காலிறுதி போட்டியில் மற்ற இந்திய வீராங்கனைகள் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பைப் பெறுவார்களா என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon