மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

திருநாவுக்கரசரை விசாரிக்க வேண்டும்!

திருநாவுக்கரசரை விசாரிக்க வேண்டும்!

‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ராமமோகனராவ் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும்’ என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஜோசப் என்பவர் இன்று (நவம்பர் 22) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது தமிழக அரசு. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்களை புகார் மனுக்களாகவோ, பிரமாண பத்திரமாகவோ பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுவரை 70 பேர் நேரடியாகவும் தபால் மூலமாகவும், இந்த ஆணையத்தில் தங்களது தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த விசாரணையை இன்று காலையில் தொடங்கினார் நீதிபதி ஆறுமுகசாமி. திமுகவைச் சேர்ந்த சரவணன் விசாரணைக்கு முதலில் ஆஜரானார்.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜோசப் என்பவர், இன்று ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். ‘காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஓய்வுபெற்ற ராம மோகன ராவ் ஆகியோர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும்’ என்று அதில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon