மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

இந்தியாவின் முதல் சார்ஜிங் மையம்!

இந்தியாவின் முதல் சார்ஜிங் மையம்!

மின்சாரத்தில் ஓடும் வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் வசதியைத் தரும் மையம் ஒன்று நாகபுரியில் தொடங்கப்பட்டுள்ளது. மின் வாகனங்கள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பெட்ரோல் இல்லாமல் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களைத் தயாரித்துவருகின்றனர். இந்தியாவிலும் மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் சமீபத்தில் சோதனை முயற்சியாக வெளியாகின.

அதன் தொடர்ச்சியாக ola நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்கள் வெளியாகியுள்ளன. அதனை சார்ஜ் செய்வதற்காகப் புதிய சார்ஜிங் மையத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் துவங்கியுள்ளது. நாகபுரி நகரில் இயங்கிவரும் பெட்ரோல் பங்கில் துவங்கப்பட்டுள்ள இந்த சார்ஜிங் மையம் பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலாவுடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளது.

மின்சாரப் பொதுப் போக்குவரத்து வழிமுறையை இந்தியாவில் துவங்கிய முதல் நகரமாக நாகபுரி இருப்பதோடு, மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் சேவையைத் தரும் முதல் நகரமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் 55 இடங்களில் 135 மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் துவங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2030ம் ஆண்டிற்குள் மின்சார கார்களை அதிகம் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், நாகபுரியைத் தொடர்ந்து பல்வேறு நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களிலும் மின்சார வாகனங்களைச் சார்ஜ் செய்யும் மையங்கள் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon