மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

மிலாது நபி விடுமுறை மாற்றம்!

மிலாது நபி விடுமுறை மாற்றம்!

இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்றான மிலாது நபிக்கான விடுமுறை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 2 ஆம் தேதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மிலாது நபி பிறை தெரிந்த நாளிலிருந்து 12 ஆவது நாளில் கொண்டாடப்படும். ஆனால், கடந்த 19 ஆம் தேதி பிறை தெரியாததால், 12 நாட்கள் முடிவடைந்து அதற்கு அடுத்த நாளான டிசம்பர் 2 ஆம் தேதியில் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும். அதனால், டிசம்பர் 2 ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை காஜி நேற்று முன்தினம்(நவம்பர் 20) அன்று அரசுக்கு கடிதம் எழுதினார்.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில், “தமிழகத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி மிலாது நபிக்கு விடுமுறை அளிக்கப்படும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.இந்நிலையில், தமிழக அரசின் தலைமை காஜி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க டிசம்பர் 2 ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்படும். முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon