மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

இதுவே என் பதில்!

இதுவே என் பதில்!

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசின் மீது பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டையும் வைத்துவருகிறார். அதற்கு அமைச்சர்களும் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி, “ஓர் அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக் கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆக வேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்... தயவாய்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டிருந்தார்.

அவரது இந்தப் பதிவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டக் கூடாது எனவும், அவ்வாறு குற்றம்சாட்டினால் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அறப்போர் இயக்கத்தினர் வெளியிட்ட வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் நேற்று (நவம்பர் 21) பதிவிட்டுள்ளார். அதனுடன், “அறப்போர் இயக்கச் சகோதரர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். என்னைக் கேள்வியும் ஆதாரமும் கேட்போருக்கு இதுவே போதுமான பதில். மேலும் உள்ளதாம் பல ஆதாரங்கள்” என்று பதிவிட்டுள்ளார். ஆதாரம் எங்கே எனக் கேட்ட அமைச்சர் ஜெயக்குமாருக்கு தனது பதிவின் மூலம் கமல் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அறப்போர் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், சென்னை மந்தைவெளியில் உள்ள தேவநாதன் தெருவில் சாலை அமைத்ததில் ரூ.26 லட்சம் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon