மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

நீதிமன்ற நடவடிக்கை: வீடியோ பதிவு செய்யலாம்!

நீதிமன்ற நடவடிக்கை: வீடியோ பதிவு செய்யலாம்!

நீதிமன்ற நடவடிக்கைகளை வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்வதில் எந்தவித ஆட்சேபமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று (நவம்பர் 21) விசாரணைக்கு வந்தது.

அப்போது, இது தனியுரிமை தொடர்பான வழக்கு அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு தனியுரிமை தேவையில்லை. இங்கு எந்தவித தனிப்பட்ட சம்பவங்களும் நிகழ்வதில்லை. அனைவருமே உங்கள் முன்புதான் உட்கார்ந்திருக்கிறோம் என்று கூறினார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் மாதமே அனைத்து மாநிலங்களிலும் குறைந்தது இரண்டு மாவட்டங்களிலாவது நீதிமன்றங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தோம். அது நிறைவேற்றப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நவம்பர் 23ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் ஏற்கெனவே தொடங்கி விட்டோம். அதுதொடர்பான விவரங்களை விரைவில் தாக்கல் செய்கிறோம் என்று கூடுதல் சொலிட்டர் ஜெனரல் தெரிவித்ததையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon