மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

பணமதிப்பழிப்பு: ரிச்சர்ட் தாலர் விளக்கம்!

பணமதிப்பழிப்பு: ரிச்சர்ட் தாலர் விளக்கம்!

‘இந்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை சிறப்பான ஒன்றுதான். ஆனால், அது மிகவும் ஆழமாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தப்படவில்லை’ என்று 2017ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர், தனது முந்தைய கருத்துக்கு விளக்கமளித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு பல்வேறு தரப்பிலிருந்து அதற்கு முரணாகவும் ஆதரவாகவும் கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் 2017ஆம் ஆண்டுக்கான பொருளாதாரப் பிரிவு நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை வரவேற்றுத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஸ்வராஜ் குமார் என்ற ரிச்சர்ட் தாலரின் மாணவர் ஒருவர் அவருக்கு மின்னஞ்சல் வாயிலாக பணமதிப்பழிப்புக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளதற்கும், 86 சதவிகிதம் அளவிலான நோட்டுகளை உடனடியாக திரும்பப் பெறுவது அவ்வளவு சுலபமான நடவடிக்கையா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஸ்வராஜ் குமாரின் கேள்விக்குப் பதிலளித்துள்ள ரிச்சர்ட் தாலர், “ஊழலை ஒழிக்கும் முயற்சியாக உயர் மதிப்பு நோட்டுகளைப் பழக்கத்திலிருந்து நீக்குவது ஒரு சிறந்த முடிவாகும். ஆனால் அதை நடைமுறைப்படுத்திய விதம் தவறு. 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது ஒட்டுமொத்த நோக்கத்தையே குழப்பிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இவர் கூறுவதுபோல, எதிர்கால விளைவுகளை முன்கூட்டியே ஆராய்ந்து சரியான வகையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை!

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon