மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப்  வடிவேலு

தாயிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

தந்தையிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

மனைவியிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

சகோதரனிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை உனக்கு உறுதுணையாக இருப்பேன் என்று.

சகோதரியிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று.

மகனிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று.

மகளிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று.

வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் அது கடலில் கொட்டிய பெருங்காயமே.

உஸ்ஸ்ஸ்... ஒருபக்கம், அன்பை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லைன்னு தானே தெரியணும், புரியணும் அப்படிங்கிறாங்க. இன்னொரு பக்கம் இப்படி நிரூபி நிரூபின்னு வாட்ஸப்ல நிரவிகிட்டு இருக்காங்க. நாட்டுல நிரூபிக்கப்படாத நிலுவையில உள்ள கேஸே எவ்ளோ இருக்கு தெரியுமா போராளிகளே..

(எவ்ளோ இருக்குன்னு என்னைய திருப்பி கேட்டுடாதீங்க.. எனக்கே தெரியாது..)

சரி அடுத்து...

தோற்று போனால்

வெற்றி கிடைக்குமா ?

அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..

அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..

துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..

பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..

சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..

நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..

ஆகவே தோற்று போ,

தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

அன்புடன் வாழுங்கள். மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்...

அதேதான், ஜெயிக்க வேண்டும், வெற்றி வேண்டும்னு காலைல ஒருத்தன் மெசேஜ் பண்றான்.. தோற்றுப்போ தோற்றுப்போன்னு இன்னொருத்தன் உயிர எடுக்கறான்.. என்னடா பண்ண சொல்றீங்க என்னைய...

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon