மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

திலீப் வெளிநாடு செல்ல அனுமதி!

திலீப் வெளிநாடு செல்ல அனுமதி!

மலையாள நடிகை வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகர் திலீப் வெளிநாடு செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மலையாள நடிகை ஒருவரைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார். அவர் தற்போது துபாயில் தொடங்கி உள்ள உணவு விடுதி திறப்பு விழாவுக்குச் செல்ல அனுமதி கேட்டிருந்த நிலையில் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை அளித்துள்ள கேரள உயர் நீதிமன்றம் பறிமுதல் செய்யப்பட்ட திலீப்பின் பாஸ்போர்ட்டை ஆறு நாள்களுக்குள் அவரிடம் வழங்குமாறு அங்கமாலி குற்றவியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் நான்கு நாள்களுக்குள் அவர் திரும்பி வர வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

நடிகையைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பதிவான வழக்கில் நடிகர் திலீப்புக்குச் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது பாஸ்போர்ட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இப்போது திலீப்புக்கு வெளிநாடு செல்லவும் அனுமதி கிடைத்துள்ள நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகும் முடிவை அரசு தரப்பு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon