மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

பியூட்டி ப்ரியா - வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்க!

பியூட்டி ப்ரியா - வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்க!

பற்களும் உதடுகளும் நம் அழகை மேலும் மேம்படுத்திக்காட்டக் கூடியவை. மெருகூட்டுபவை. வெறும் கன்னமும் கண்களும் மட்டுமே அழகின் முக்கியம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பற்களைத் துலக்குவதையும், உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடுவதனாலும் மட்டுமே முடிந்துவிடுவதாக நினைத்துக்கொண்டு உள்ளனர் சிலர்.

வெளியில் அழகுப்படுத்திக் கொள்வதைக்காட்டிலும், துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக இருப்பதே அவசியம். சாப்பிட்ட பிறகு கிராம்பு மெல்வதுகூட நல்ல பலனைத் தரும். அதிக சூடான, குளிச்சியான பொருள்களை பல்லில் படாமல் சாப்பிடுவதும் நல்லது. எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ், ஆப்பிள் சிடார் வினிகர் போன்றவற்றை கூட ஸ்ட்ரா கொண்டு பல்லில் படாமல் குடித்தால் பற்கள் பாதுகாக்கப்படும்.

இப்போது பிரஷ்ஷிலேயே டங்க் க்ளீனர் வைத்து வந்திருக்கிறது. அதைக்கொண்டே ஈறுகளையும் மசாஜ் செய்து விட முடியும். இரவு உறங்கும் முன் பல் துலக்கும் பழக்கம் குழந்தைகளாக இருக்கும்போதே பழக்கிவிட வேண்டும். மவுத்வாஷ் உபயோகிப்பதைக் காட்டிலும் தினமும் இருவேளை பிரஷ் கொண்டு பல் துலக்குவதே சிறந்தது.

இப்போது அழகுப்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்ப்போம். உதடுகளுக்கு என்று தனி கவனம் கொடுத்து மேக்கப் போடும் நாள்களில், எக்காரணம் கொண்டும் கண்ணுக்கு அதிக மேக்கப்பை போட்டு விடாதீர்கள். அது மேக்கப்பை கெடுத்துவிடும். உதடுகளுக்கு மேக்கப் போடுவது சுலபமாகச் செய்யக் கூடிய விஷயமாக இருக்க வேண்டும்.

மேக்கப் போடும்போது முகத்துக்குப் போடும் மாய்ச்சுரைசிங் க்ரீம் மற்றும் பவுண்டேஷனை உதடுகளுக்கும் லேசாக தடவி, பிறகு லிப்ஸ்டிக் போட்டால் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கும்.

லிப் ஷேப்பை மாற்றுகிறேன் என்று, லிப் பென்சில் கொண்டு கோடு வரைவதற்கு முன்பு அது நீண்ட நேரம் தாக்கு பிடிக்குமா என்று தெரிந்து கொள்ளுங்கள். அப்படி நீண்ட நேரம் இல்லாத லிப் பென்சிலாக இருந்தால் உதடுகளின் உள்ளே அல்லது வெளியே உள்ள லிப்ஸ்டிக் மட்டும் தெரிந்து முகத்தை அசிங்கமாகக் காட்டி விடும்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon