மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

இந்திரஜித் டிக்கெட் இலவசம்!

இந்திரஜித் டிக்கெட் இலவசம்!

இந்திரஜித் திரைப்படம் வெளிவரும் நாளில் பிறந்த நாள் கொண்டாடுபவர்களுக்கு அந்தப் படத்தின் டிக்கெட் இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

‘ஹர ஹர மகாதேவி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கெளதம் கார்த்திக் நடிக்கும் திரைப்படம் இந்திரஜித். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் மகனும் சக்கரகட்டி படத்தின் இயக்குநருமான கலாபிரபு இயக்கியுள்ளார். தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம், அதற்கான புது யுக்தியொன்றைக் கையாண்டுள்ளது. இந்தப் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் நிலையில் அன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் சென்னை மல்டிஃப்லெக்ஸ் திரையரங்குகளில் படத்தின் டிக்கெட் இலவசமாக கிடைக்கும் என அறிவித்துள்ளது.

உதயம் என்ஹெச்4 படத்தில் நடித்த அஷ்ரிதா ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்குப் படத்தொகுப்பாளராக கணேஷ் பாபுவும், ஒளிப்பதிவாளராகப் பாடலாசிரியர் அறிவுமதிவின் மகன் ராசாமதியும் பணியாற்றி உள்ளனர். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஶ்ரீ பிரசாத்திடம் உதவி இசையமைப்பாளராக இருந்த கிருஷ்ண பிரசாத் முதன்முறையாக இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், கெளதம் கார்த்திக் நடிப்பில் இந்த வருடம் வெளியாகும் ஐந்தாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon