மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

பிச்சை எடுத்து தானம் வழங்கிய மூதாட்டி!

பிச்சை எடுத்து தானம் வழங்கிய மூதாட்டி!

தள்ளாத வயதில் பிச்சை எடுத்துச் சேர்த்து வைத்த ரூ.2.5 லட்சம் பணத்தை ஒரு மூதாட்டி கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்துக்கான தொகையாக வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

மைசூர் அருகே, வண்டிகோபல் பகுதியில் பிரசித்தி பெற்ற பிரசன்ன ஆஞ்சநேயர் திருக்கோயில் ஒன்று உள்ளது. இங்குப் பல காலமாகப் பிச்சை எடுத்து வரும் சீதாலட்சுமி என்ற மூதாட்டி தன் பிச்சை எடுத்துச் சேர்த்த பணத்தை, அந்தக் கோயிலில் அனுமார் ஜெயந்தி அன்று வழங்கப்படும் பிரசாதத்துக்காக அனைவருக்கும் கிடைக்கும்படியாகச் செலவிடுங்கள் எனக் கூறி கோயில் நிர்வாகத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

இது குறித்து அந்த மூதாட்டி கூறும்போது,“எனக்கு 85 வயது ஆகிறது. நான் யாரிடமும் வற்புறுத்தி பிச்சை எடுத்தது மாட்டேன். பக்தர்களாகப் பார்த்து போடும் காசை தினமும் சேர்த்து வைப்பேன். என்னிடம் இருந்தால் யாரேனும் திருடி விடுவார்கள் என்ற பயம் அதிகரித்தது. அதோடு இவ்வளவு பணத்தை வைத்து நான் என்ன செய்ய போகிறேன்? பக்தர்கள் எனக்கு அளித்த பணத்தை, அவர்களுக்காக நான் அளிக்கிறேன். எனக்காக இறைவன் இருக்கிறான். அதனால் கவலை இல்லை. எனவே, நான் சேர்த்து வைத்திருந்த பணத்தை அளித்தேன்” எனத் தெரிவித்தார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon