மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

வெங்காயம்: ஏற்றுமதி விலை உயர்வு!

வெங்காயம்: ஏற்றுமதி விலை உயர்வு!

இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கான அடிப்படை விலை அல்லது குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) மத்திய அரசு உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

வர்த்தக அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் அடிப்படை விலை, டன்னுக்கு ரூ.45,470 முதல் ரூ.51,966 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

வெங்காய உற்பத்தியில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாகச் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.65 வரை விற்பனையாகிறது. இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் அதிகளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் 12.29 லட்சம் டன் அளவிலான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 56 சதவிகிதம் அதிகமாகும்.

2017-18ஆம் ஆண்டுக்கான காரிஃப் பருவத்தில் (ஏப்ரல் - அக்டோபர்) வெங்காயம் பயிரிடும் பரப்பளவும் பெருமளவு குறைந்துள்ளது. நாட்டின் மொத்த வெங்காயத் தேவையில் காரிஃப் பருவத்தில் 40 சதவிகிதமும், ராபி பருவத்தில் (அக்டோபர் - மார்ச்) 60 சதவிகிதமும் உற்பத்தி செய்யப்படுகிறது. காரிஃப் பருவத்தில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை அடுத்த பருவத்துக்கு சேமித்து வைக்க இயலாத நிலை உள்ளது. எனவே, ராபி பருவத்தில் வெங்காய உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon