மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

ஹெல்த் ஹேமா – சுக்கின் மருத்துவக் குணங்கள்!

ஹெல்த் ஹேமா – சுக்கின்  மருத்துவக் குணங்கள்!

‘சுக்கும் தேனும் மக்குப் பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும்’ என்ற பழமொழி யாரோ சொல்ல காதில் விழுந்தது. எதனுடன் எதை சேர்த்தால் என்ன பயன் எனத் தெரியாமலே பல மூலிகை பொருள்கள் வீட்டில் பத்திரமாக தூங்குகிறது. அவற்றில் ஒன்றுதான் சுக்கு. மருத்துவக் குணம் வாய்ந்தது என்று தெரிந்த உடனே கிலோ கணக்கில் வாங்கி வைத்து உறங்கிக் கொண்டிருப்பதைச் சற்று தட்டி எழுப்புங்கள்.

சுக்கு, கருப்பட்டி, மிளகு (Pepper) சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்

சுக்கு, மிளகு, சீரகம் (Cumin), பூண்டு (Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சைச் சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

சுக்குடன், கொத்தமல்லி சேர்த்து கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

மசக்கை உள்ளவர்களுக்கு ஏலக்காய் சுக்கைத் தின்றால் சுகப்பிரசவம் எனும் பழமொழியோடு நாளையும் தொடர்வோம்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon