மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

மீண்டும் கட்சித் தலைவரானார் லாலு

மீண்டும் கட்சித் தலைவரானார் லாலு

ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவராக லாலுபிரசாத் யாதவ் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து பத்தாவது முறையாக அவர் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார்.

ஜனதாதளம் கட்சியிலிருந்து பிரிந்து, கடந்த 1997ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியைத் தொடங்கினார் லாலுபிரசாத் யாதவ். தொடங்கிய நாள் முதல், அக்கட்சியின் தலைவராக அவர் இருந்துவருகிறார். இந்த ஆண்டு, கட்சியின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்தன. தலைவர் பதவிக்குப் போட்டியிட, கடந்த 12ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.

இந்த நிலையில், லாலுவைத் தவிர வேறு யாரும் இப்பதவிக்கு மனு தாக்கல் செய்யவில்லை என்று அறிவித்தார் தேர்தல் அதிகாரி. இதனால் உட்கட்சித் தேர்தல் நடைபெறாமல், தொடர்ந்து பத்தாவது முறையாக ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக, தலைவர் பதவிக்காக லாலுபிரசாத் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தபோது, ‘அந்த கட்சி ஒரு குடும்பத்தின் சொத்து’ என்று கிண்டலடித்திருந்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். இந்த நிலையில், எந்தவித போட்டியின்றி மீண்டும் கட்சித்தலைவர் ஆகியிருக்கிறார் லாலு.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon