மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

ஜூலி 2: பிரபல நடிகையின் பயோ பிக்!

ஜூலி 2: பிரபல நடிகையின் பயோ பிக்!

ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ஜூலி 2 திரைப்படம், 90களில் பிரபலமாக விளங்கிய கவர்ச்சி நடிகை ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக அதன் தயாரிப்பாளர் பாஹ்லாஜ் நிகாலனி தெரிவித்துள்ளார்.

படம் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அந்த நடிகை கான் நடிகர்களில் ஒருவரது படம் மூலமாக இந்தி திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பிரபலமானார். திருமணமான பிரபல நடிகருடன் அவருக்கு இருந்த பழக்கம் அவரை தென்னிந்தியத் திரையுலகிலிருந்து வெளியேற்றியது. அதன் பின் போஜ்புரி படங்களில் நடித்து வரவேற்பு பெற்றார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

அவரது வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக ராய் லட்சுமியும் தெரிவித்துள்ளார். “எனது கதாபாத்திரத்துக்கும் அந்த நடிகைக்கும் ஒற்றுமை இருப்பதை மறுக்கவில்லை. இது தெரிந்து வைக்கப்பட்டதா அல்லது எதேச்சையாக நடைபெற்றதா என்பது எனக்கு தெரியாது” என்று ராய் லட்சுமி கூறியுள்ளார்.

பாஹ்லாஜ் நிகாலனி கூறும்போது, “இது கண்டிப்பாக அந்த நடிகையின் வாழ்க்கையை தழுவியே உருவாகியுள்ளது. அவரது பெயரை பயன்படுத்தவில்லை. அவரது வாழ்வோடு தொடர்புடைய பிரபல நடிகர்களின் கதாபாத்திரங்களும் படத்தில் உள்ளன. வரும் வெள்ளி அன்று (நவம்பர் 24) படம் வெளியாகும்போது யார் அந்த நடிகை என்று நீங்களே காணலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon