மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

பெண், பெண்ணை மணக்கும் விநோதக் கலாசாரம்!

பெண், பெண்ணை மணக்கும் விநோதக் கலாசாரம்!

பெண்கள் மற்ற பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் விநோதக் கலாசாரம் வடக்கு தன்சானியாவின் நியாமோங்கோ கிராமத்தில் உள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு இன மக்களிடையே பல்வேறு விதமான கலாசாரங்கள் இருக்கின்றன. எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் பல சமூகங்கள் தமது கலாசாரத்தை விட்டுக்கொடுப்பதில்லை. அதிலும் பழங்குடி இன மக்கள், இதில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

வடக்கு தன்சானியாவின் நியாமோங்கோ கிராமத்தில் உள்ள குரிய பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் மற்ற பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதனால்தான் இவர்கள் மற்றவர்களிடமிருந்து, தனித்துத் தெரிகின்றனர்.

குரிய பழங்குடியின மக்களின் உள்ளூர் பாரம்பர்யத்தின்படி, பெண்கள் மற்ற பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் முன், குழந்தைக்காக ஒரு ஆணைத் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வார்கள்.

அதுவும் அந்தப் பெண்களே தனக்கான ஆணைத் தேர்வு செய்து, குழந்தை பெற்றுக் கொண்ட பின் பெண்கள் மற்ற பெண்ணை திருமணம் செய்து, அந்த இரு பெண்களும் சேர்ந்து அந்தக் குழந்தையை வளர்ப்பார்கள்.

ஆண்களும் தந்தைக்கான உரிமையை எடுத்துக் கொள்ளாமல் பெண்களிடமே விட்டுச் சென்று விடுவார்கள்.

திருமணத் தம்பதிகளாக கருதப்படும், அந்த இரண்டு பெண்களும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட மாட்டார்கள்.

இப்படி ஒரு பழக்கம் ஏன்?

குழந்தை இல்லாத பெண்கள், தன் சொத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பெண்கள் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் இந்த விநோதமான பழக்கத்தை, தன்சானியா பழங்குடியின மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

இதேபோல், திருமணச் சீதனமாகப் பாம்பு வழங்கப்பட்ட சம்பவம் இலங்கையில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon