மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!

 கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!

விளம்பரம்

‘ஶ்ரீ தக்‌ஷா’வின் ஆஷ்ரிதா வளாகத்தில் இருந்த எங்களை, “எல்லாரும் வாங்களேன். சாப்பாட்டு நேரமாச்சு. எங்க வீட்டுல சாப்பிடலாம்” என்று அழைத்தார் அந்த அப்பார்ட்மென்ட்வாசியான ராஜேஷ்.

“”வேண்டாம் தம்பி. நீங்க இவ்வளவு விஷயங்களைப் பேசியது எங்கள் பசியைப் போக்கிடுச்சு. கோவை வந்து செட்டில் ஆன பிறகு நீங்கயில்லே... நாங்களே உங்களைக் கூப்பிடுறோம்” என்றோம்.

விடைபெறும் முன் சொன்னார், “இந்த அப்பார்ட்மென்ட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரும் என்னைப் பொறுத்தவரை சாதி, மதம் பார்க்கறதில்லை சார். அடிக்கடி கெட் டு கெதர் நடக்கும். பரஸ்பரம் எல்லா விஷயங்களையும் பேசிக்குவோம் . உதவின்னு கேள்விபட்டதும் ஓடோடி வந்துடுவாங்க. சாதாரணமா அப்பார்ட்மென்ட்டுல நடக்கிற சின்னச் சின்ன பிரச்னைகளுக்குக்கூட பக்கத்து ஃப்ளாட்டுல இருக்கிறவங்ககூட நம்மகிட்டே பேச மாட்டாங்க. ஃப்ளாட் மெயின்ட்டனென்ஸைப் பொறுத்தவரை எல்லா பொறுப்புகளையும் ஶ்ரீ தக்‌ஷா நிர்வாகமே கவனித்துக்கொள்வதால் தொண்ணூறு சதவிகிதப் பிரச்னைக்கு இடமில்லை. மீதி பத்து சதவிகிதப் பிரச்னையை எங்களோட கெட் டு கெதர் போக்கிடும். எங்க வீட்டுல அடுத்து நடக்கப்போற சீமந்த விசேஷத்துக்கு வந்து பாருங்க சார்... இந்த உண்மை புரியும்” என்றார்.

“ஆல் தி பெஸ்ட் தம்பி... நீங்க சொன்ன அத்தனை விஷயங்களுக்கும் ரொம்ப நன்றி தம்பி” விடை பெற்றோம்.

நேரத்தைப் பார்த்தேன். மணி மதியம் இரண்டைக் கடந்திருந்ததை உணர்ந்ததும்தான் பசியெடுக்கத் தொடங்கியது.

எங்கள் அருகில் இருந்த ஆஷ்ரிதா வளாக மார்க்கெட்டிங் மானேஜரைப் பார்த்தேன். அவரும் எங்கள் நிலைமையை உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

“சாப்பாட்டுக்குப் போகலாம் சார். பக்கத்துலதான் ‘பாரம்பரியம்’ உணவகம் இருக்கு.”

“பாரம்பரியமா , பெயரே நல்லாயிருக்கே...”

“உணவு வகைகளும் நீங்க விரும்பற மாதிரி பாரம்பரியமாயிருக்கும் சார்.”

மணி இரண்டைக் கடந்துவிட்டதால் சாப்பிட்டால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். ருசியை நினைக்கிற நேரமாக அது அமையவில்லை.

காரில் அமர்ந்தோம்.

கோவையின் இதே பகுதியான வடவள்ளியில் வசிக்கும் க்ரைம் கதை மன்னன் திரு.ராஜேஷ்குமார் தன் முகநூல் பதிவில் படித்ததில் இனித்தது என்று கோவையைப் பற்றி பதிவு செய்திருந்தது நினைவுக்கு வந்தது.

தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை;

மதுரையைக் கடக்கிறது வைகை;

நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி;

தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது;

திருச்சியிலே ‘பெல்’ (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது.

என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.

வற்றாத ஒரு நதியுமில்லை;

வானளாவிய ஒரு கோயிலுமில்லை;

இதிகாசத்திலே இடமுமில்லை;

எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை;

இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, ‘குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்’ மக்கள் வாழத்தகுதியே இல்லை....

அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்? இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே எப்படி?

ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம்.

சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம்.

மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம்.

கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம்.

வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது.

எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.

பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த ‘டெக்ஸ் சிட்டி’, சமீபகாலமாய் ‘ஹை-டெக் சிட்டி’யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை.

உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகுக்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்... இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில்முனைவோர்தான்.

அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்றுபட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.

புதுப்புது நுட்பங்களால் கண்டுபிடிப்புகளில் கலக்கும் தொழில்முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி நடை போடுகிறது...

அந்த பெருமையுடன் எல்லா கோவை நட்புகளும் இறுமாப்பாய் சொல்லுங்க... என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!

காரில் நாங்கள் உணவகத்துக்குச் செல்லும் பாதையில் பார்வையில்பட்ட கோவை மாநகரக் காட்சிகள் மேலே சொன்ன, ‘என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!’ என்ற வரிகளை நினைவுபடுத்திக் கொண்டே வந்தது.

எங்கள் கார் சற்று நேரத்தில் நின்ற இடத்தில் ‘பாரம்பரியம்’ உணவகம் என்ற பெயர் பலகை தென்பட்டது.

“வாங்க சார்... சாப்பிட போகலாம்” என்றார் எங்களுடன் வந்த ஶ்ரீ தக்‌ஷா நிர்வாகி.

உள்ளே நுழையும்போது கேட்டேன்... “அமைப்பே அட்டகாசமாயிருக்கே...?” என்றேன்.

“இதுவும் ‘ஶ்ரீ தக்‌ஷா’ பிராப்பர்ட்டீஸ் டெவல்ப்பர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டோதுதான் சார்” என்றார். ஆச்சர்யத்துடன் உள்ளே நுழைந்தோம்

பயணம் தொடரும்...

விளம்பர பகுதி

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon