மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

மேல்மருவத்தூரில் 12 விரைவு ரயில்கள் நின்று செல்லும்!

மேல்மருவத்தூரில் 12 விரைவு ரயில்கள் நின்று செல்லும்!

மேல்மருவத்தூரில் 12 விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சபரிமலை சீசன் மற்றும் தைபூச திருவிழாவை விழாக்களை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 13ஆம் தேதி முதல் 2018 ஜனவரி 31ஆம் தேதி வரை 12 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும்.

மலைக்கோட்டை விரைவு ரயில் (வண்டி எண் 12653), வைகை விரைவு ரயில் (வண்டி எண் 12635), பாண்டியன் விரைவு ரயில் (வண்டி எண் 12637), பொதிகை (வண்டி எண் 12661), சாம்பர்க் கிராந்தி (வண்டி எண் 12652), லோக்மான்ய திலக் விரைவு ரயில் (வண்டி எண் 11043), நாகர்கோவில் விரைவு ரயில் (வண்டி எண் 12667), உத்தரபிரதேச மாநிலம் மண்டுவாடி-ராமேசுவரம் விரைவு ரயில், மன்னை விரைவு ரயில் (வண்டி எண் 16179), சென்னை எழும்பூர்-மதுரை விரைவு ரயில் (வண்டி எண் 22623), வாரணாசி விரைவு ரயில் (வண்டி எண் 15120), ஹஸ்ரத் நிஜாமுதின் விரைவு ரயில் (வண்டி எண் 12642) உள்ளிட்ட 12 விரைவு ரயில்கள் இரு மார்க்கமாகவும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும்.

சபரிமலை சீசன் மற்றும் தைபூச திருவிழாவை முன்னிட்டு 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதியிலிருந்து இந்தாண்டு பிப்ரவரி 9ஆம் தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 12 விரைவு ரயில்கள் 1 நிமிடம் நின்று சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon