மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

தாமதித்து வந்த அறிவிப்பு!

தாமதித்து வந்த அறிவிப்பு!வெற்றிநடை போடும் தமிழகம்

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘செம்ம போத ஆகாதே’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை அதர்வா தனது புதிய தயாரிப்பு நிறுவனமான கிக் அஸ் என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்து வருகிறார். அதர்வாவுக்கு ஜோடியாக அனைக்கா ஷோதி மற்றும் மிஷ்டி சக்ரபோதி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். கருணாகரன், ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல் பதிவுகள் உட்பட பல்வேறு பணிகள் கடந்த வருடமே முடிவுற்றது. கடந்த வருடம் (2016) டிசம்பரில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம் எனத் தெரிவித்திருந்தனர். ஆனால், அது சாத்தியமாக ஒரு வருடமாகி உள்ளது. பல்வேறு பிரச்னைகளால் இவ்வளவு தாமதமாகியுள்ளது எனத் தெரிகிறது.

இந்த நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லரை நவம்பர் 22ஆம் தேதி வெளியிட இருப்பதாக அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திங்கள், 20 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon