மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

இந்தியா Vs இலங்கை: பி.சி.சி.ஐ அறிவித்த மாற்றம்!

இந்தியா Vs இலங்கை: பி.சி.சி.ஐ அறிவித்த மாற்றம்!

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று (நவம்பர் 20) டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) தொடங்குகிறது.

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று முடிந்த பிறகு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி தர்மசாலாவிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 13ஆம் தேதி மொகாலியிலும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி டிசம்பர் 17ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும் பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பகல் இரவு ஆட்டம் என்பதால் போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்குத் தொடங்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் மாதம் மைதானம் அமைந்துள்ள இடங்களில் அதிக அளவில் குளிர் நிலவும். இதைக் காரணம் காட்டி தர்மசாலா மற்றும் மொகாலி ஆட்டங்களில் தொடங்கும் நேரத்தை பிசிசிஐ மாற்றியுள்ளது. அதன்படி காலை 11.30 மணியளவில் போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7.30 மணிக்குப் போட்டிகள் முடிவடைந்து விடும்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon