மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

நிவின் பாலி படத்துக்குப் போட்டி!

நிவின் பாலி படத்துக்குப் போட்டி!

‘விழித்திரு’ படத்துக்குப் பிறகு நடிகர் கிருஷ்ணா நடிக்கும் ‘வீரா’ திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கிருஷ்ணா, கருணாகரன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளனர். மேலும் தம்பி ராமய்யா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ராதாரவி மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வீரா செப்டம்பரில் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 8ஆம் தேதி வெளிவரும் என்று ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடசென்னை பின்னணியில் அரசியலுக்குப் பின்னால் நடக்கும் கொலைகளையும், அதை பொதுமக்களுக்கு தெரியாமல் எப்படி மறைக்கிறார்கள் என்பதையும் கூறும் இந்தப் படத்துக்கு லியான் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். விக்னேஷ் – குமரன் ஒளிப்பதிவாளராகவும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராகவும், கதை திரைக்கதை, வசனத்தை பாக்கியம் சங்கர் எழுதியும் இந்தப் படத்தில் வேலை செய்துள்ளனர்.

வீரா வெளியாகும் டிசம்பர் 8ஆம் தேதி, நிவின் பாலியின் ரிச்சி படமும் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon