மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

மானுட மருத்துவர்!

 மானுட மருத்துவர்!

ஊர் நிர்வாகத்தில் நேர்மை, உடல் நிர்வாகத்தில் தூய்மை என்று மனித நேயரின் பொதுவாழ்வு, அக அக வாழ்வு ஒழுக்கம் பற்றிப் பார்த்தோம்.

இன்று எந்த ஒரு அரசியல் தலைவரும் மக்கள் மீது அக்கறை எடுத்து மக்கள் மீது ஆர்வம் காட்டி அவர்களின் பிரச்னையை அணுகுவதில்லை. தேர்தல் காலத்தில் வாக்காளர்களாக மட்டுமே தெரிகிற மக்கள், தேர்தல் முடிந்ததும் வாக்காளர்களாக கூட தெரிவதில்லை. மீண்டும் அடுத்த தேர்தல் வரும் வரைக்கும் மக்கள் நினைப்பு 90 சதவிகித அரசியல் வாதிகளுக்கு கிடையாது.

மீதி இருக்கிற பத்து சதவிகித அரசியல் வாதிகளில் முத்து போன்றவர் மனித நேயர். அதனால்தான் அவருக்கு எப்போதும் மக்கள் ஞாபகம், என்றென்றும் அவர்களின் நலவாழ்வில் தீராத நாட்டம்.

வத்திகன் நாட்டு வானொலியில் சத்தாக வாழ்வது எப்படி என்பதை ஒரு மருத்துவரை விட மிக அருமையாக, வளமையாக, சுவையாக, சுவாரஸ்யமாக விளக்கியிருக்கிறார் நமது மானுட மருத்துவரான மனித நேயர்.

மனிதனின் வாயில் 32 பற்கள் இருக்கின்றன. எதற்காக 32 பற்கள்? இந்த காரண காரியங்களை வாடிகன் ரேடியோவுக்கு மனித நேயர் அளித்துள்ள விளக்கத்தில் பார்ப்போம்.

’’உணவு உண்ணும் முறை சரியாக இருந்தால் நமது உடலுக்கு எவ்வித பிரச்னையும் வராது. நமக்கு எத்தனை பற்கள்? 32 பற்கள். ஏன் 32 பற்கள்? அதுதான் இயற்கையின், இறைவனின் உன்னதமான படைப்பு நேர்த்தி.

நாம் உண்ணும் ஒரு வாய் உணவை 32 முறை மென்று உண்டால், எந்த பிரச்னையும் இல்லை. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று. அந்த பதினாறு செல்வங்கள் என்ன என்று தெரியுமா? மனை, மக்கள், செல்வம் என்று பலர் பதினாறு செல்வங்களை அடுக்குவார்கள். அது அல்ல...

நம் வாயில் சுரக்கும் உமிழ்நீர் இருக்கிறதல்லவா? அதில் 16 வகையான சலவாய் இருக்கிறது. அதாவது சலவாய் என்ற சொல்லுக்கு சலவாய்-வாய் சலம்-வாயிலிருந்து வடியும் சலம் என்று பொருள். நமது உமிழ் நீரில் இருக்கும் 16 வகையான சலவாய்கள் உணவோடு முழுமையாக கலந்தால்தான் அந்த உணவு முழுமையாக செரிமானம் ஆகும். வாயில் போடப்பட்ட உணவு 32 முறை மெல்லப்பட்டால்தான் 16 வகையான சலவாய்களும் உணவோடு கலந்து செரிமானத்தை எளிமைப்படுத்தும்.

சாப்பிட்ட உணவு உடலோடு சேர வேண்டுமென்றால் இந்த என்சைம்கள் உணவில் சேர வேண்டும். அதற்கு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொள்ளுங்கள்., நன்றாக மென்று சாப்பிட்டால்தான் உணவு செரிமானம் ஆகும்.

அவசர அவசரமாக அப்படியே விழுங்கிவிட்டுப் போனால், வாயில் சுரக்கும் சலவாய் உணவோடு கலக்க வாய்ப்பில்லாமல் போய்விடும். அப்புறமென்ன, அந்த உணவை நமது குடல் செரிமானம் செய்ய மிகவும் சிரமப்படும். இதனால்தான் மலச்சிக்கல் ஆரம்பிக்கிறது. மலச் சிக்கலில் இருந்துதான் மற்ற சிக்கல்கள் ஆரம்பிக்கின்றன.

எனவே நாம் எதற்காக சம்பாதிக்கிறோம்., யாருக்காக சம்பாதிக்கிறோம் என்பதை எல்லாம் கொஞ்சம் யோசித்து உணவு உண்பதற்கு தேவையான நேரத்தை ஒதுக்குங்கள். சாவகாசமாக அமர்ந்து சாப்பிடுங்கள். நானெல்லாம் ரெண்டே நிமிஷத்துல சாப்ட்டுடுவேன் என்பது பெருமையும் அல்ல.. ’என்னடா, பந்தியில எல்லாரும் எந்திரிச்சு போயிட்டாங்க. இன்னும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கியே?’ என்பது சிறுமையும் அல்ல’’ அந்த பேட்டியில் விளக்கிச்

சொல்கிறார் மனித நேயர்.

இவரை ஏன் நாம் மானுட மருத்துவர் என்று சொல்லக் கூடாது?

இந்த சமூகத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கி... பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிள்ளைகள் தங்களது கல்வி உரிமையைப் பெற்று நாட்டின் உயர்ந்த அதிகாரிகளாக மிளிரவேண்டும் என்பதற்காக மனித நேய அறக்கட்டளையை நடத்துகிறார் மனித நேயர்.

இதனைத் தொழிலாக செய்தால் அவர் எத்தனை எத்தனை கோடிகளை அடைந்திருப்பார் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை தொழிலாக செய்யாமல்... சேவையாக, தனது மனிதக் கடமையாக செய்து வருகிறார் மனித நேயர்.

அதேநேரம் மாணவர்களுக்கு மேற்சொன்ன உணவு உண்ணும் முறை பற்றிய தெளிவான விளக்கங்களைக் கொடுத்து அவர்களின் வாழ்வியலில் ஒரு அர்த்த விளக்கை அழகாக ஏற்றி வைக்கிறார்.

இப்படி பொதுமக்களின் உணவுப் பழக்கம் வரை அக்கறை கொண்டு அதை மேம்படுத்த மனித நேயர் சொல்லும் இன்னொரு முக்கியமான ஆலோசனையும் இருக்கிறது. அதைப் பார்ப்போம்.

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon