மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: வாக்கிங் போகிற மாதிரி ஷாப்பிங்!

 கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’:  வாக்கிங் போகிற மாதிரி ஷாப்பிங்!

“சார்... உங்களைப் பார்த்தா எனக்குப் பரிச்சயப்பட்டவர் மாதிரி தெரியறீங்க. எங்கேயோ பார்த்திருக்கேன். எங்கேன்னு தெரியலை... ப்ளீஸ் உள்ளே வாங்க...” என்றவரை நானும் ஆராய்ந்தேன். ஆனால், அவருடைய முகம் என் நினைவுக்குள் வரவில்லை.

செப்பல் கப்போர்டில் காலணியைக் கழற்றி அடுக்கிவிட்டு உள்ளே சென்றோம். ஹால் விசாலமாக இருந்தது. எங்களில் மூவர் நீண்டிருந்த சோபாவிலும் அருகே இருந்த இரண்டு ஒற்றை ஆள் அமரும் சோபாவில் நானும் அவரும் எதிரெதிராக அமர்ந்தோம்.

“சோபா நல்லாயிருக்கு” என்றார் சம்பந்தி.

“நீங்க இப்படி சொல்றதுக்குக் காரணம் ஶ்ரீ தக்‌ஷா தாங்க. பில்டிங் மட்டுமல்ல... வெளியே இருக்கிற செப்பல் கப்போர்டு, வார்ட் ரோப், பூஜையறை ஸ்டாண்டு, நீங்க உட்கார்ந்திருக்கிற சோபா, நான் படுத்துக்கொள்ளும் கட்டில், டைனிங் டேபிள், நாற்காலிகள், டீப்பாய், சமையலறையில் உள்ள மாடுலர் கிச்சன், பாத்திரங்கள் - உணவுப் பொருள்கள் வைக்கிற செல்ஃப் எல்லாமே ஶ்ரீ தக்‌ஷாவோட நிர்வாகம் செய்து கொடுத்ததுதான்.”

நான் இடையில் பேச முயன்றேன். ஆனால், அவர் என்னைப் பேசவிடாமல் பேச்சைத் தொடர்ந்தார்...

“ஃப்ளாட்டை புக் செய்யும்போது எங்களுக்குத் தேவையான பொருள்கள் எந்த இடத்தில் இருந்தால் வசதியாயிருக்கும் என்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போ எங்களுடன் வந்த ‘ஶ்ரீ தக்‌ஷா’ ஆள், ‘உங்களுக்கு எந்த மாதிரியான பொருள் எந்த அளவில் வேணும்னு சொல்லுங்க... வார்ட்ரோப் , செல்ஃப் எல்லாம் நாங்களே அமைச்சுக் கொடுத்துடுவோம். உங்க வசதிக்காக வேறு என்ன என்ன வேணும்னு சொல்லுங்க... செய்து கொடுத்துடறோம்’னு சொன்னாங்க. அவங்க செய்து தரும் வசதி செமி பர்னீஷ்டு, ஃபுல் பர்னீஷ்டு இரண்டு வகையிலே இருக்கு.

வயசான காலத்திலே நானும் அலைய முடியாது. வெளியூர்ல இருக்கிற என் பசங்களை இதுக்காக வரவழைக்கவும் முடியாது. ஃபுல் பர்னீஷ்டு பண்ணிடுங்கன்னு சொன்னேன். இப்ப சுகமா அனுபவிக்கிறேன். காசு கொடுத்தாலும் நிம்மதியை வாங்கறது கஷ்டங்க. அந்த நிம்மதி எனக்கு இங்கே கிடைக்குது. அதுக்காக நிறைய காசைக் கொடுத்துட்டேன்னு நினைக்காதீங்க. நியாயமான விலையில் தரமான பொருள்களைத்தான் அவங்க கொடுத்திருக்காங்க. இந்த ஃப்ளாட்டோட விலையும் அப்படிதான் எனக்கு அமைந்தது . இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்லியே ஆகணும். இந்த வீட்டுக்குள்ளே ஏற்படுகிற சின்னச்சின்ன பிரச்னைகளைக்கூட அவங்க கவனத்துக்குக் கொண்டு போனா உடனே சரி செய்து கொடுத்துடுவாங்க” என்றவர் என் சம்பந்தியைப் பார்த்து “காபி சாப்பிடறீங்களா?” என்றார்.

அவர் ‘வேண்டாம்’ என்று மறுத்ததும்...

மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார்... “என்ன நான் மட்டும் பேசிட்டே இருக்கேன்னு நினைக்காதீங்க. நான் இப்ப ஃபீல் பண்ணிட்டு இருக்கறதைக் கொட்டிடணும்னு ஆசை. வயசு ஏற ஏற மனுஷனுக்கு வருகிற சாதாரண விஷயம் இது. ஆனா இளசுங்க, ‘இந்த வயசானவங்க கிட்டே மாட்டினா... பேசி பேசியே காலி பண்ணிடுவாங்க’ன்னு நினைப்பாங்க. பெரியவங்க தங்களோட அனுபவத்தைத்தான் பகிர்ந்துக்கிறாங்கன்னு நினைக்க மாட்டாங்க. என்னோட அனுபவங்கள்தான் இப்படி பேச வைக்குது. அதுதான் இப்ப நீங்க வந்ததும் இப்படி தொடர்ச்சியா என்னைப் பேச வைக்குது” என்று அவர் சொன்னபோது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.

“அங்கிள் வெளியே யாரோ உங்களைக் கூப்பிடறாங்க” என்றாள் என் மருமகள்.

“சாப்பாடு வந்திருக்கும்...” என்றவர் உள் அறை பக்கம் திரும்பி, “அம்மாடி... கார்டுல பே பண்ணியாச்சு... சாப்பாட்டை வாங்கிட்டு வந்தவருக்கு டிப்ஸ் மட்டும் கொடுத்துடு” என்று எங்கள் பக்கம் திரும்பியவர், “ஊருக்குப் போயிட்டு காலையிலேதான் சார் வந்தோம். மதிய சாப்பாட்டுக்கு ஆர்டர் பண்ணியிருந்தோம். பயண அசதி எனக்கு மட்டுமில்லை. என் வொய்ப்புக்கும் இருக்கும்தானே... அதான் சாப்பாட்டை வரவழைச்சுட்டோம் . இந்த இடத்தைப் பொறுத்தவரைக்கும் எல்லா வசதியும் இருக்கு சார். ஃப்ளாட்டை விட்டு ரோட்டுல இறங்கினா ஏடிஎம்ஸ், பேங்க்ஸ், டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ், ஓட்டல்ஸ், காய்கறி, பழக்கடைகள்... சாயந்திர வேளையில நானும் என் வொய்ப்பும் மெல்ல மெல்ல இறங்கி நடந்து வாக்கிங் போகிற மாதிரி ஷாப்பிங் முடிச்சுட்டு வந்துடுவோம்.”

என் மகனும் மருமகனும் நெளிந்தார்கள். சம்பந்தி ஆணியடித்தார் போல் அவர் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார்.

தன் பேச்சை சற்று நிறுத்தியதை உணர்ந்த நான், “சார்... உங்களைப் பத்திச் சொல்லவே இல்லையே...” என்றேன்.

“என்னைப் பத்தி நான் சொல்வது இருக்கட்டும்... உங்களைத்தான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு... அது எங்கேன்னுதான் தெரியலை... நான் உங்களோட இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தாலும் மூளையின் ஒரு மூலையில் அதுபத்தி யோசிச்சுட்டுதான் இருக்கேன்” என்றவர் மீண்டும் என்னை உற்றுப் பார்த்தார்.

“சினிமா பார்ப்பீங்களா சார்?” என்றான் என் மகன்.

அதுவரை இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்தவர் யோசிக்கத் தொடங்கினார்.

பயணம் தொடரும்...

விளம்பர பகுதி

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon