மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

ஓய்வின்றி ஓடும் ராஷி கண்ணா

ஓய்வின்றி ஓடும் ராஷி கண்ணா

ராஷி கண்ணா நடிப்பில் தெலுங்கில் வெளியான ஜெய் லவ குசா, மலையாளத்தில் வெளியான வில்லன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படங்களின் நாயகியான ராஷி கண்ணா நடிப்பு, பாட்டு என மீண்டும் பிஸியான பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

தெலுங்கில் விக்ரம் சிரிகொண்டா இயக்கத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ‘டச் சேசி சூடு’ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு சங்கராந்தி அன்று வெளிவரவுள்ளது. இதனைத் தொடர்ந்து வருண் தேஜ் உடன் ‘தொலி பிரேமா’ படத்தில் நடித்துவருகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட முடிவு செய்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் வெங்கி அட்லுரிஇயக்கி வருகிறார். தமிழில் இமைக்கா நொடிகள், சைத்தான் கா பச்சா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ராஷி.

தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் ராஷி கண்ணா அவ்வப்போது சில பாடல்களையும் பாடிவருகிறார். சாய் தரம் தேஜ், மெஹ்ரீன் நடித்துள்ள ஜவான் படத்தில் ‘பங்காரு...’ என்ற பாடலை திப்பு உடன் சேர்ந்து பாடியுள்ளார். எஸ்.எஸ் தமன் இசையமைத்துள்ள இந்தப் பாடல் தற்போது யூ டியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடிகை, பாடகி என்று தொடர்ந்து இயங்கிவரும் ராஷி கண்ணா, “ஒரு நடிகையாக ஒரு கதையில் என்னுடைய பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை அறிந்துகொண்டு நான் நடிக்கும் படங்களுக்கான கதைகளைத் தேர்வு செய்கிறேன். எந்த மொழியாக இருந்தாலும் சரி என்னுடைய திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் கிடைத்தால் அதை நிச்சயம் முழுமையாக பயன்படுத்தி என்னுடைய தனித்துவத்தை வெளிக்காட்ட முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon