மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

ரஜினி, கமலுக்கு என்.டி.ஆர் விருது!

ரஜினி, கமலுக்கு என்.டி.ஆர் விருது!

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் ஆந்திர அரசின் நந்தி விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர அரசால் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் நந்தி விருதுகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்களை ஊக்குவிக்கும் வகையில் தெலுங்குத் திரைப்படங்களுக்கும், தென்னிந்திய சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கும் விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகின்றன.

2014 முதல் 2017 வரை ஆண்டிற்கான நந்தி விருதுகள் குறித்த பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2014ஆம் ஆண்டிற்கான என்.டி.ஆர். தேசிய விருதை நடிகர் கமல்ஹாசன் பெறுகிறார். 2015ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான விருதை பாகுபலி கைப்பற்றியுள்ளது. 2016ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான விருது பெல்லி சுப்புலுக்கு வழங்கப்படவுள்ளது.

2014ஆம் ஆண்டில் வெளியான லெஜென்ட் திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகர் என்ற விருதை நடிகர் பாலகிருஷ்ணா பெறுகிறார். மேலும் 2016ஆம் ஆண்டின் என்.டி.ஆர் விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படவுள்ளது.

நந்தி விருதுகள் வழங்கும் விழாவில் பல முன்னணி நடிகர் நடிகைகள் கலந்துகொள்ள இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை ஆந்திர அரசு தீவிரமாகச் செய்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon