மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

மீண்டும் இணையும் சர்ச்சை கூட்டணி!

மீண்டும் இணையும் சர்ச்சை கூட்டணி!

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு பிறகு மீண்டும் இணைகிறது ஆதிக் மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணி.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு சர்ச்சைகளையும் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார் ஆதிக். ஆனால் இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை சோனியா அகர்வால் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகார்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. வெகு விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்கள், பணியாற்றி வரும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon