மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

ரப்பர் உற்பத்தி அதிகரிப்பு!

ரப்பர் உற்பத்தி அதிகரிப்பு!

இந்தியாவின் ரப்பர் உற்பத்தியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ரப்பர் வாரியத்தின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக, கடந்த மே மாதத்தில் நாட்டின் ரப்பர் உற்பத்தி 8.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2016ஆம் ஆண்டு மே மாதத்தின் ரப்பர் உற்பத்தி 46,000 டன்னாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டின் மே மாத உற்பத்தி 50,000 டன்னாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 8.7 சதவிகிதம் கூடுதலாகும். கடந்த 2016ஆம் நிதியாண்டின் (ஏப்ரல் - மே) முதல் இரண்டு மாதங்களில் 85,000 டன் அளவிலான ரப்பர் உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த நிதியாண்டில் உற்பத்தி 15.3 சதவிகிதம் அதிகரித்து, 98,000 டன்னாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் வேகம் தொடர்ந்தால், இந்த ஆண்டின் முடிவுக்குள் ரப்பர் உற்பத்தி 8 லட்சம் டன்னைத் தாண்டும் என்று ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.

உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் ரப்பர் உற்பத்தியாளர் சங்கங்களின் ஒத்துழைப்புடன் ரப்பர் வாரியம் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறைந்த செலவில் சாகுபடி செய்து, அதிக விளைச்சல் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரப்பர் வாரியம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ரப்பர் உற்பத்தியில் முன்னிலை வகுக்கும் கேரளா மட்டுமல்லாமல் சிந்துதுர்க் மற்றும் குஜாராத் உள்ளிட்ட வட மாநிலப் பகுதிகளிலும் ரப்பர் உற்பத்தி அதிகரித்து வருவதால் நாட்டின் ஒட்டுமொத்த ரப்பர் உற்பத்தி உயரத் தொடங்கியுள்ளது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon