மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு!

நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு!

நாமகிரிப்பேட்டை அருகே கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி சின்ன காக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா (40). இவர் தனது வீட்டில் கோழிக்குஞ்சுகளை வளர்த்துவருகிறார். அதில் ஒரு கோழி சில தினங்களுக்கு முன்பு 16 குஞ்சுகளைப் பொரித்துள்ளது. அதில் ஒரு கோழிக்குஞ்சுக்கு மட்டும் நான்கு கால்கள் இருந்தன. பிறந்த பிறகு ஆரம்பத்தில் இந்தக் கோழி சரியாக நடக்க முடியாமல் சிரமப்பட்டது. தற்போது இயல்பாக நடக்கிறது.

நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு பிறந்திருப்பது பற்றி தகவலறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து அதிசயக் கோழிக்குஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இயற்கைக்கு மாறாக நான்கு கால்களுடன் அதிசயக் கோழிக்குஞ்சு பிறந்திருப்பது நாமகிரிப்பேட்டை பகுதி மக்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

இதேபோல் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அச்சப்பட்டி கிராமத்தில் ராம்கோபால் என்பவர் வளர்த்து வந்த கோழி நான்கு கால்களுடன் உள்ள ஒரு கோழிக்குஞ்சைப் பொரித்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon