மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

எஸ்.ஏ.சி. படத்தில் விஜய் ஆண்டனி

எஸ்.ஏ.சி. படத்தில் விஜய் ஆண்டனி

இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர் நடிக்கும் புதிய படத்தில் சிறப்பு தோற்றத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் விஜய் விக்ரம் இயக்கும் இந்த படத்தில் சந்திர சேகர், சமூக சேவகர் டிராபிக் ராமசாமியின் வேடத்தில் நடிக்கிறார். இயக்குநர் விஜய் விக்ரம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “சமூகத்தை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். இவரது காட்சிகள் இந்த மாத இறுதியில் படமாக்கப்பட உள்ளது” என்று கூறியுள்ளார். விஜய் ஆண்டனி சந்திரசேகர் மூலம் சுக்கிரன் படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராபிக் ராமசாமியின் பயோ-பிக் என குறிப்பிடப்படும் இப்படத்தில் ஆர்கே.சுரேஷும் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். “அவர் முரடனான நபராக நடித்துள்ளார். டிராபிக் ராமசாமி கதாபாத்திரத்திற்கு நேர்மாறானது. விதிகளை மதிக்காதவர்” என்று ஆர்கே.சுரேஷின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் விவரித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த மாடலான உப்பசனா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

டிராபிக் ராமசாமியின் மனைவி கதாபாத்திரத்தில் ரோகினியும், நீதிபதியாக அம்பிகாவும் நடிக்கின்றனர். ஹர ஹர மகாதேவி இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைக்க குகன் எஸ் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon