மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் போலீஸ்!

இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் போலீஸ்!

தெலங்கானாவில் காவல் துறை ஆய்வாளருக்குப் பெண் காவலர் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

தெலங்கானா மாநிலம் கத்வா பகுதியில் உதவி துணை ஆய்வாளராக ஹாசன் என்பவர் பணியாற்றிவருகிறார். இவருக்குக் காவல் நிலைய வளாகத்திலேயே பெண் போலீஸ் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. இது போன்ற சம்பவம் கடந்த சில மாதங்களாக நடந்துவருகிறது என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த இச்சம்பவத்தை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ காட்சியில் பெண் போலீஸ் சீருடையில் உள்ளார். ஹாசன் கண் மூடி உறங்கும் நிலையில். அவரது முதுகில் மசாஜ் செய்வதுபோல் உள்ளது. இதைக் கண்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜய்குமார் இது தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இதுபோன்று சரூர்நகர் இன்ஸ்பெக்டர் எஸ். லிங்கியாவுக்கு சயீதா நாயுடு என்ற பெண் ஹோம் கார்டு மசாஜ் செய்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon