மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

ஜிஎஸ்டி: தொழில் நிறுவனங்களுக்கு உதவி!

ஜிஎஸ்டி: தொழில் நிறுவனங்களுக்கு உதவி!

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் இன்னும் வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யாமல் இருக்கும் தொழில் நிறுவனங்களை அணுகி அவர்களுக்கு உதவுமாறு வரித் துறை தனது பிராந்திய அலுவலகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பழைய வாட் வரி விதிப்பு முறையில் வரி செலுத்தியும், புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யாமலும் இருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு உதவி புரியுமாறு வரித் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் கீழ் உள்ள தொழில் நிறுவனங்களின் மண்டல வாரியான தகவல்களை மத்திய சுங்க மற்றும் கலால் வாரியம் தனது பிராந்திய ஆணையர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்குத் தொழில் நிறுவனங்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால் அவற்றுக்குத் தேவையான உதவியை வழங்குமாறு மத்திய சுங்க மற்றும் கலால் வாரியம் தனது அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது.

இதுபற்றி அதிகாரி ஒருவர் பேசுகையில், “பழைய வாட் வரி விதிப்பு முறையில் எந்தெந்த நிறுவனங்கள் வரி ரிட்டன் தாக்கல் செய்தன என்பது பற்றி பிராந்திய அலுவலகங்களுக்குத் தெரியும். புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரி செலுத்தத் தகுதியானவர்கள் யாரேனும் விடுபட்டுவிட்டனரா என்பதைச் சரிபார்க்கத் தேவையான ஜிஎஸ்டிஆர்-3பி பற்றிய தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon