மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

மதமாற்ற ஏஜென்டாக அமைச்சர்!

மதமாற்ற ஏஜென்டாக அமைச்சர்!

மதமாற்ற ஏஜென்டாக அமைச்சர் விஜயபாஸ்கர் மாறியுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் பல ட்விட்டர் பதிவுகள் சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய இருந்து வந்துள்ளது. கடைசியாக மெர்சல் திரைப்படத்தின் போது, நடிகர் விஜயை, ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இதற்கிடையே நேற்று புதுக்கோட்டையில் எஸ்.எப்.எஸ் பள்ளி விழாவில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்," கிருஸ்தவ நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் கல்வியோடு சேர்ந்து ஒழுக்கமும் கற்றுக்கொடுக்கப் படுவதாகவும், தானும் ஒரு ஆர்.சி.பள்ளியில் படித்த மாணவர் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து மாணவர்களால பள்ளி பெருமையடைவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் ஹெச்.ராஜா இன்று ( நவம்பர் 14) தனது ட்விட்டர் இட்டுள்ள பதிவில்,"திராவிட புரட்டுப் பூனை வெளியே, அண்ணாதுரை முதல்வர் ஆனவுடன் பள்ளிகளில் இருந்து நீதிபோதனை வகுப்புகளை ஒழித்து ஒழுக்கக்கேட்டை போதித்த ஈ.வெ.ரா கூட்டம் கிறித்தவ பள்ளிகளே ஒழுக்கம் கற்று தருகின்றன என மதமாற்ற ஏஜண்டாக மாறியுள்ளனர். விஜயபாஸ்கரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பின்னூட்டம் அளித்திருந்த ஒருவர், "தில்லு இருந்தா விஜயபாஸ்கர் கேஸை ஸ்பீடா நடத்துத்துயா" என்றிருந்தார். அதற்கு "நடக்கும்" என்று ரிடிவிட் செய்துள்ளார் ஹெச்.ராஜா.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon