மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு பேரணி!

உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு பேரணி!

நம்மில் இருந்த உணவு பழக்கவழக்கமும், வாழ்வியல் முறையும் மாறியதால் பல நோய்கள் அதிகமாக வருகிறது. இந்த நிலையில் தான் நவம்பர் 14-ம் தேதியை "உலக சர்க்கரை நோய் தினமாகக் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறோம்". உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டிய விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்தார் ,சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர். சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் சர்க்கரை நோய் உயர்நிலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த அமைச்சர் மரக்கன்றுகளையும் நட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்கள் தொகையில் 10-லிருந்து 12 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் தாக்கம் உள்ளதாக தெரிவித்தார். மேற்கத்திய நாடுகளில் 40 வயதுக்கு மேல்தான் சர்க்கரை நோயின் தன்மை தொடங்குவதாகவும், இந்தியாவில் 30 வயதிலிருந்தே இந்நோயின் தன்மை தொடங்குவதால் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், மதுரையிலும் மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள். இதில் 200 க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு சர்க்கரை நோயின் பதிப்பை பற்றி விளக்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதியை உலக சர்க்கரை நோய் தினமாகக் கடைபிடிக்கப்படும். இந்த ஆண்டு பெண்களுக்கான சர்க்கரை நோய் தினமாக கடைபிடிக்கபடுவதாக உலக சுகாதர நிறுவனம் அறிவித்தது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon