மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

சொன்னதைக் கேட்கும் பல்ப்!

சொன்னதைக் கேட்கும் பல்ப்!

அமெரிக்காவை சேர்ந்த MicroNovelty என்ற நிறுவனம் கண்டறிந்துள்ள புதிய பல்ப் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் பயன்பாடு குறித்த வீடியோ பதிவினை MicroNovelty நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ப்ளூடூத் மற்றும் வை ஃபை என எந்த வித வசதியும் இல்லாமல் மொபைல் அப்ளிகேஷன் மூலம் இயங்கும் இந்தப் புதுமையான பல்ப் சப்தங்களை உணர்ந்து செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்மார்ட் போன்களில் உள்ள அப்ளிகேஷனுடன் இணைத்துக்கொண்டு நமக்குத் தேவையான MODE-களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். HEELIGHT எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பல்பில் ரீடிங், கேண்டில் லைட், நைட் லேம்ப், ஹால்லோவீண், சன்ரைஸ் அன்ட் சன்செட் என பல்வேறு MODE-களைக் கொண்டுள்ளது.

நைட் லேம்ப் என்ற MODE-ஐ ஆக்டிவேட் செய்தால் சப்தங்களின் அளவை வைத்து அதற்கு ஏற்றாற்போல் வெளிச்சத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்கிறது. அதேபோல் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ள இந்த பல்ப் விலை ரூ.1800. இதன் வெளியீடு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இணையத்தில் வெளியாகிய இதன் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon