மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

தினம் ஒரு சிந்தனை: யோசனை!

தினம் ஒரு சிந்தனை: யோசனை!

ஒரே ஒருமுறை நடந்தால் அது தடமாக மாறாது. அதேபோல் ஒரு விஷயத்தை ஒரே ஒருமுறை சிந்திப்பதன் மூலம் நமக்கு சரியான யோசனை கிடைக்காது.

- ஹென்றி டேவிட் தொரேயு (12 ஜூலை 1817 – 6 மே 1862). இவர் அமெரிக்க கட்டுரையாளர், கவிஞர், தத்துவஞானி, இயற்கையியலாளர், வளர்ச்சி விமர்சகர் மற்றும் வரலாற்றாசிரியர். அவருடைய படைப்புகளில் சுற்றுச்சூழல்தனை அனுசரித்து வாழும் எளிமையான வாழ்க்கை முறையைச் சொல்லும் ’வால்டென்’ என்ற புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தப் புத்தகத்தில் பகவத் கீதையையும், கங்கை நதியின் புனிதம் பற்றியும் சொல்லியதன் மூலம் இந்தியக் கலாசாரத்தின் மீது அவர் வைத்திருந்த மதிப்பு தெரிய வருகிறது. ‘அரசாங்கம் என்ற ஒன்றே வேண்டாம் என நான் சொல்லவில்லை. நல்ல அரசாங்கம் ஒன்று வேண்டும் என்றுதான் சொல்கிறேன்’ என முழங்கியவர். வாழ்வின் பெரும்பகுதியை மக்களை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கும் முயற்சியில் பேச்சு மற்றும் எழுத்தில் செலவிட்டவர்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon