மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

மழை பாதிப்பு: அமைச்சர்கள் தலைமையில் குழு!

மழை பாதிப்பு: அமைச்சர்கள் தலைமையில் குழு!

மழை பாதிப்புப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்தது. இதனால் பல்லாயிரம் ஏக்கரிலான விவசாயப்பயிர்கள் நீரில் மூழ்கின.

இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமி நேற்று (நவம்பர் 13) தலைமை செயலகத்தில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர்களிடம் காணொளி மூலம் கலந்துரையாடினார். அப்போது, “நாகை மாவட்டத்தில் மழை பாதிப்புப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிவாரணப்பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து இந்தக் குழு நடவடிக்கை மேற்கொள்ளும். சம்பா பயிர்களுக்குக் காப்பீடு செய்ய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் காமராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon