மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

தொடரும் வெங்காய விலை உயர்வு!

தொடரும் வெங்காய விலை உயர்வு!

‘சமீபகாலமாக உயர்ந்துவரும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு, பொங்கல் பண்டிகை வரை நீடிக்கும்’ என்று காய்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை தற்போது ரூ.150 முதல் ரூ.180 வரை அதிகரித்துள்ளது என சென்னை கோயம்பேடு மொத்த விற்பனையாளர்கள் கூறுகின்றனர். முன்னதாக ஒரு நாளைக்கு 10 லாரி சின்ன வெங்காயம் விற்பனைக்காகக் கொண்டுவரப்படுவது வழக்கம். ஆனால், இந்த விலையேற்றத்தின் காரணமாக தற்போது ஒரு லாரியில் பாதி லோடு மட்டுமே வருகிறது.

சமையலுக்கு ஆதாரமாக விளங்கும் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த செப்டம்பர் மாதம் வரை கிலோ ஒன்று 80 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாக 180 ரூபாய் வரை விற்பனையாகிறது. வெங்காய வரத்து குறைந்துள்ள காரணத்தால் பொங்கல் பண்டிகை வரையில் வெங்காயத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

பிற அத்தியாவசியக் காய்கறிகளான தக்காளி ஒரு கிலோ ரூ 50க்கும், காரட் ரூ.60க்கும், இஞ்சி ரூ.70க்கும், பீன்ஸ் ரூ.75க்கும், அவரைக்காய் ரூ.80க்கும், முருங்கைக்காய் ரூ.140க்கும், வெண்டைக்காய் ரூ.50க்கும், பச்சை மிளகாய் ரூ.40க்கும், உருளைக்கிழங்கு ரூ.20க்கும், பீட்ரூட் ரூ.30க்கும் கத்திரிக்காய் ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon