மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

முறைசாராத் துறையில் திறன் மேம்பாடு!

முறைசாராத் துறையில் திறன் மேம்பாடு!

முறைசாராத் துறையினருக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யும் வகையில் அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

மத்தியில் ஆளும் மோடி அரசானது வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மிகவும் மந்தமாகச் செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்புகளிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மேம்படுத்த முறைசாராத் துறையினருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கும் திட்டத்தில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதன்படி, டெய்லரிங் கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் சாலையோர விற்பனையாளர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக பீகார் மாநிலத்தின் சப்ரா பகுதியில் சோதனை அடிப்படையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடங்குகிறது.

இதுபோல முறைசாராத் துறையினருக்குப் பயிற்சியளிப்பதன் மூலம், அவர்களைச் சிறந்த தொழில்முனைவோராக உருவாக்கவியலும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இவர்களது வேலைவாய்ப்பு உருவாக்கம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் எனவும் மத்திய அரசு கருதுகிறது. குஜராத் மாநிலத்தில் நடந்துவரும் தேர்தல் பிரசாரத்தில், பாஜக அரசு போதிய வேலைவாய்ப்பை வழங்குவதில்லை என்ற முழக்கங்கள் மக்களிடமிருந்தும் எதிர்க்கட்சியினரிடமிருந்தும் எழுந்துள்ளன. இதன் எதிரொலியாகவே இந்த நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon