மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

கங்கணாவுக்குப் போட்டியாக பருல் யாதவ்

கங்கணாவுக்குப் போட்டியாக பருல் யாதவ்

‘இந்தியில் கங்கணா ரணாவத் நடித்த குயின் அளவுக்குத் தான் நடிக்கும் பட்டர்ஃபிளை படம் பேசப்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் நடிகை பருல் யாதவ்.

2014ஆம் ஆண்டு வெளியான குயின் படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார் பருல் யாதவ். இந்தப் படத்தில் நடித்துவருவது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்திய சினிமாவில் குயின் திரைப்படம் நிச்சயம் ஒரு மைல்கல். அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால், இன்று வரை நான் செய்த அனைத்துப் படங்களையும் புதையலாக நினைக்கிறேன். நல்ல கதைகள் முடிந்தவரை பல மொழிகளில் எடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு நல்ல கதை என்பது மனதுக்குள் ஊடுருவி நம்மை ஊக்குவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

‘பாலிவுட்டில் குயின் தாக்கத்தை ஏற்படுத்தியது போல கன்னடத்திலும் பட்டர்ஃபிளை தாக்கத்தை ஏற்படுத்துமா?’ என்ற கேள்விக்கு, “நிச்சயமாக ஏற்படுத்தும். இந்தக் கதை உலகளாவிய மற்றும் எல்லோரையும் தொடர்பு படுத்தக்கூடிய கதையாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன் மற்றும் கன்னடத்தில் பரூல் யாதவ் நடித்து வருகின்றனர். தற்போது பாரீஸில் அனைத்து மொழி ரீமேக்கின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon