மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா பகுதியில் நேற்று மதியம் (13.11.2017) காவல்படையினர் வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென காவலர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர்.

உடனே சுதாரித்துக்கொண்ட காவல்படையினர் எதிர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மேலும் கூடுதல் காவல்துறை வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து, தீவிரவாதிகளுக்கும், காவல்படையினருக்கும் இடையே சில மணி நேரம் சண்டை நீடித்திருக்கிறது. இந்தச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு காவலர் பலத்த காயமடைந்திருக்கிறார். இந்த நிலையில், அப்பகுதியில் தீவிரவாதிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பல தீவிரவாதிகள் ஹந்த்வாரா பகுதியில் முகாமிட்டிருப்பதாகத் தகவல் காவல்படையினருக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே, கூடுதல் படைகளைச் சம்பவ இடத்துக்கு வரவழைக்கத் துரிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தகவல் தெரிவிக்கின்றன.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon