மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

தமிழில் பாகிஸ்தான் பாடகர்!

தமிழில் பாகிஸ்தான் பாடகர்!

நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி.

‘செய்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘இறைவா’ என்ற சூஃபி பாடலை ஆதிஃப் அலி பாடியுள்ளார். இதற்கு முன்னர் பல பாகிஸ்தான் படப் பாடல்களையும், இந்தி பாடல்களையும் பாடியிருக்கிறார் என்பதோடு, ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஜூலி 2’ படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பாடகர் ஒருவர் தமிழில் பாடுவது இதுவே முதன்முறை என்பதை அறிந்த ஆதிஃப் அலி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இவருடன் இணைந்து ஹிந்துஸ்தானி பாடகரான சபதஸ்வரா ரிஷுவும் ‘இறைவா’ பாடலைப் பாடியுள்ளார்.

“நிக்ஸ் லோபஸ் இசையில் யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடல் கேட்டவுடன் அனைவருக்கும் பிடித்துப்போகும். நீண்ட நாள்கள் ஒலிக்கும் பாடலாகவும் இந்த சூஃபி பாடல் இருக்கும்” என்று படத்தின் தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஷங்கர் மகாதேவன், சோனு நிகம், ஷ்ரேயா கோஷல், பென்னி தயாள் மற்றும் அறிமுகப் பாடகி கீதாஞ்சலி ஆகியோர் பாடியுள்ளனர். டிசம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இந்தப் படத்தை ட்ரிப்பி டர்ட்டிள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மன்னு மற்றும் உமேஷ் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon