மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

கிறிஸ் கெய்ல் இல்லாத டி-20!

கிறிஸ் கெய்ல் இல்லாத டி-20!

இந்தியன் பிரீமியர் லீக் போல் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்த தொடரில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பர். இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது பாகிஸ்தான் சூப்பர் லீக் அடுத்த வருடம் நடத்தப்பட உள்ளது. அதற்காக வீரர்கள் தேர்வு நடைபெற்றது.

இதில் அதிர்ச்சி தரும் விதமாக எந்த அணி உரிமையாளர்களும் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை தேர்வு செய்யவில்லை. டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை சேர்த்த வீரர், அதிரடி ஆட்டக்காரர் என அனைவராலும் அறியப்பட்ட கிறிஸ் கெய்ல் இதுவரை 309 போட்டிகளில் விளையாடி 10,571 ரன்களை அடித்துள்ளார். டி-20 போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதிகபட்சமாக 175 ரன்களை ஒரு போட்டியில் அடித்து மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். சமீப காலமாக ஃபார்ம் இன்றி தவிக்கும் கெய்ல் முழு தொடரிலும் விளையாடுவது சந்தேகம். எனவே அவரை அணியில் தேர்வு செய்யவில்லை என அனைத்து அணி நிர்வாகிகளும் தெரிவித்தனர்.

உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் கிறிஸ் கெய்ல் விளையாட வாய்ப்புள்ளது. இதனால் கிறிஸ் கெய்லை அணியில் எடுத்தாலும் அவரால் தொடர் முழுவதும் விளையாட முடியாது. இதனால்தான் அவரை உரிமையாளர்கள் ஏலத்தில் எடுக்கவில்லை.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon