மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 நவ 2017

ஜிஎஸ்டிக்குப் புது விளக்கம்!

ஜிஎஸ்டிக்குப் புது விளக்கம்!

பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பர் 8ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவடையவுள்ளது. இதைக் கறுப்பு தினமாக அனுசரிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த நிலையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கை பேராபத்து. பொருளாதாரத்தை அழித்த இந்த மோசடி தினத்தை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும்” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானார்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், பணமதிப்பழிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நவம்பர் 8ஆம் தேதி அனைவரும் சமூக வலைதளங்களில் ப்ரோபைல் படத்தைக் கறுப்பு நிறத்தில் வைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். தனது ப்ரொபைல் புகைப்படத்தையும் கறுப்பு நிறத்துக்கு மாற்றியுள்ளார்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மோடியைச் சாடியுள்ள மம்தா, “ஜிஎஸ்டியால் வேலைவாய்ப்பு பறிபோனது. தொழில்துறை பாதிக்கப்பட்டது. பொருளாதாரம் முடங்கியுள்ளது. மொத்தத்தில். ஜிஎஸ்டியைச் சமாளிக்க இந்திய அரசு தவறிவிட்டது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜிஎஸ்டி என்றால் பெரிய சுயநல வரி (Great Selfish Tax) எனவும் அவர் கிண்டலடித்துள்ளார்.

முன்னதாக, நவம்பர் 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் கறுப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 7 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon